பெர்ஃபாமென்ஸ் ரக N லைன் வரிசை கார்களை வெளியிடும் ஹூண்டாய் இந்தியா

0

Hyundai N Line Launch

இந்திய சந்தையில் பெர்ஃபாமென்ஸ் ரக N Line கார்களை விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் முதல் மாடலாக ஹூண்டாய் i20 N டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

மற்ற சாதாரண மாடலை கூடுதலான பவர் மற்றும் சஸ்பென்ஷன் மேம்பாடுகள், இன்டிரியரில் புதிய ஸ்டைலிங் அம்சங்கள் என பலவற்றை பெற்றதாக விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் கிடைக்கின்ற என் லைன் கார்களில் உள்ள  120hp பவரை வழங்கவல்ல 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 7 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். மாறுபட்ட பானெட் ஸ்போர்ட்டிவ் பம்பர், புதிய ட்வீன் க்ரோம் எக்ஸ்ஹாஸ்ட், 17 அங்குல அலாய் வீல் உள்ளிட்ட மாறுபாடுகளுடன் இன்டிரியரில் என் லைன் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்டிவ் பெடல், ஸ்போர்ட்டிவ் டிசைனாக மேம்படுத்தப்பட்டிருக்கும்.

தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.