ரூ.25.19 லட்சத்தில் ஹூண்டாய் டூஸான் 4WD விற்பனைக்கு வெளியானது

0

hyundai tucson 4WDகடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஹூண்டாய் டூஸான் எஸ்.யூ.வி காரில் கூடுதலாக ஆல் வீல் டிரைவ் பெற்ற  ஹூண்டாய் டூஸான் 4WD வேரியன்ட் ரூ.25.19 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ஹூண்டாய் டூஸான் 4WD

Hyundai Tucson 4WD Drivetrain

இரண்டு வீல் டிரைவ் பெற்ற மாடலில் உள்ள அதே டீசல் எஞ்சின் ஆல் வீல் டிரைவ் பெற்றதாக வந்துள்ளது. அதிகபட்சமாக 182 பிஹெச்பி ஆற்றல் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 400 என்எம் ஆகும். ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகையில் மட்டுமே கிடைக்கின்றது.

On-Demand 4WD functioning எனும் நுட்பத்தை பெற்றதாக வந்துள்ள நிலையில் சாலையின் தன்மைக்கு ஏற்ப 4 வீல் டிரைவ்/ 2 வீல் டிரைவ் அம்சத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையை பெற்றுள்ள நிலையில் 50:50 என டார்க்கினை சக்கரங்களுக்கு வழங்கும் வகையில் 4WD லாக் மோடினை Advanced Traction Cornering Control (ATCC)  வாயிலாக வழங்குவதுடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்துகின்றது.

மேலும் இந்த மாடலில் எல்கட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெய்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹீல் அசிஸ்ட், டவுன் ஹீல் பிரேக் கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

ஹூண்டாய் டூஸான் விலை பட்டியல்
வேரியன்ட் விலை
2WD MT Petrol ரூ.17,99,900
2WD AT GL Petrol ரூ.20,99,000
2WD MT Diesel ரூ.19,95,900
2WD AT GL Diesel ரூ. 22,49,000
4WD AT GLS Diesel ரூ.25,19,000

( எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

Hyundai Tucson 4WD Rear