Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி வெளியானது

by MR.Durai
17 April 2019, 8:52 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் சப் காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் மிகவும் ஸ்டைலிஷாக ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு மே 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. உயர்தரமான பாதுகாப்பினை வழங்கும் நோக்கில் 69 சதவீத உயர் ரக ஸ்டீல் கொண்டு வெனியூ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான் எஸ்யூவி, பிரபலமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ளது.

bf911 hyundai venue interior 1

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் உள்ள சிறப்புகள்

வெனியூ இந்திய சந்தையில் மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

அடுத்த பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.

அடுத்த டீசல் என்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.

ப்ளூலிங்க் டெக்னாலாஜி

7 வகையான பிரிவுகளை பெற்ற கனெக்ட்டிவிட்டி நுட்பங்களை பெற்றுள்ள இந்த வெனியூ காரில் குறிப்பாக காரினை பாதுகாக்கும் அம்சம், அவசரகால பாதுகாப்பு உரிமையாளர்களுக்கு காரின் நிலையை உடனுக்குடன் அறியும் வசதி, வாகனத்தின் பாரமரிப்பு சார்ந்த மேலான்மை வசதி என முதன்முறையாக இந்திய சந்தையில் குறைந்த விலை கொண்ட மாடலில் இதுபோன்ற அம்சங்களை இணைத்துள்ளது. இந்த காரில் வோடபோன் இ சிம் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் நீளம் 3995 mm , அகலம் 1770 mm மற்றும் உயரம் 1590 mm ஆகும். வெனியூவின்  மிகவும் தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2500 mm வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் வெனியூ எஸ்யூவியில் பாதுகாப்பு சார்ந்த  ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட் போன்றவை இடம்பெற்றுள்ளது.

ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் விலையில் வரும் மே மாதம் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் ஹூண்டாயின் அட்டகாசமான வசதிகளை கொண்ட வெனியூ விற்பனைக்கு வெளியிடப்படக்கூடும்.

Hyundai venue SUV rear

Related Motor News

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

2025 ஏப்ரலில் ரூ.70,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்

மேம்பட்ட 2025 ஹூண்டாய் வெர்னா, வெனியூ மற்றும் கிராண்ட் ஐ10 அறிமுகம்

ஹூண்டாய் வெனியூ அட்வென்ச்சர் எடிசன் வெளியானது

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

குறைந்த விலையில் ஹூண்டாய் வெனியூ சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

Tags: Hyundai Venue
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan