2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

0

2021 Jeep Compass Facelift fr

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜீப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர் இணைக்கப்பட்டுள்ளது.

Google News

காம்பஸ் இன்ஜின் விபரம்

காம்பஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஆல் வீல் டிரைவ் பெற்ற வேரியண்எடில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பில் தேன்கூடு அமைப்பிலான இன்ஷர்ட்ஸ் உடன் கூடிய 7 ஸ்லாட் பாரம்பரிய கிரில், புதிய ஹெட்லைட் உடன் இணைந்த எல்இடி டிஆர்எல், புதிய பம்பர், அகலமான ஏர் டேம் வென்ட் மற்றும் பனி விளக்கு அறை புதுப்பிக்கபட்டுள்ளது. புதிய வடிவ 18 அங்குல அலாய் வீல் சேர்க்கப்பட்டு, பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற அமைப்பிலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை.

2021 Jeep Compass Facelift Dashboard

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய இன்டிரியரை பெற்றுள்ள காம்பஸ் காரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கோண கேமரா வியூ, மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் FCA UConnect 5 கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, ஏசி, ஹெச்விஏசி கன்ட்ரோல்கள் மாற்றப்பட்டுள்ளது.

காம்பஸ் டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மற்றும் ISOFIX குழந்தைகள் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் டூஸான், ஸ்கோடா கரோக் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. மேலும் காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை எஸ்யூவி 2022 ஆம் ஆண்டு வெளியாகலாம்.

jeep compass facelift rear