ஜீப் காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு ஆரம்பம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு டீலர்கள் மற்றும் இணையதளத்தின் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற முதல் மேட் இன் இந்தியா ஜீப் எஸ்யூவி காம்பஸ் மாடலாகும்.

காம்பஸ் எஸ்யூவி முன்பதிவு

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி  போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்குகின்ற வகையில் அமைந்திருக்கும்.

முதற்கட்டமாக 5 வகையான வேரியன்ட் பிரிவில் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம், டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் மாடல்கள் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்சின் விபரம்

காம்பாஸ் மாடலில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 160 ஹெச்பி பவருடன்,  250 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.

விலை மற்றும் வருகை

வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற காம்பஸ் எஸ்யூவி மாடல் விலை ரூ. 18 முதல் ரூ. 25 லட்சம் வரையிலான விலைக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது ரூ.50,000 கட்டணமாக செலுத்தி காம்பஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jeep Compass SUV Image Gallery in Tamil

Recommended For You