காம்பஸ் நைட் ஈகிள் எடிஷனை விற்பனைக்கு வெளியிட்ட ஜீப்

0

Jeep Compass Night Eagle

250 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் மாடலின் விலை ரூ.20.14 லட்சம் முதல் ரூ.23.31 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு எடிசனின் விற்பனை எண்ணிக்கை 250 யூனிட்டுகள் மட்டும் வழங்கப்பட உள்ளது.

Google News

லாங்ட்யூடு பிளஸ் வேரியண்டை அடிப்படையாக கொண்டு வந்துள்ள ஸ்பெஷல் எடிசனில் இன்டிரியர் மற்றும் வெளிப்புறத்தில் கருமை நிறத்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வெள்ளை, கருப்பு, கிரே மற்றும் சிவப்பு நிறங்கள் கிடைக்கும்.

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதியுடன் கூடுய 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பொத்தான் ஸ்டார்ட், இரட்டை மண்டல ஏசி கட்டுப்பாடு, இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் ஸெனான் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

அடுத்து பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன்,  250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Jeep Compass Night Eagle Dashboard

ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் விலை

காம்பஸ் 1.4 லிட்டர் பெட்ரோல் – ரூ.20.14 லட்சம்

காம்பஸ் 2.0 லிட்டர் டீசல் MT- ரூ.20.14 லட்சம்

காம்பஸ் 2.0 லிட்டர் டீசல் DCT – ரூ.20.14 லட்சம்

Jeep Compass Night Eagle Exotica Red