10,000 முன்பதிவுகளை அள்ளிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எஸ்யூவி ரக சந்தையில் ரூ.14.95 லட்சத்தில் ஜீப் காம்பஸ் வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10,000 காம்பஸ் மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் முன்பதிவு விபரம்

க்ரெட்டா, எக்ஸ்யூவி500 ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ள காம்பஸ் எஸ்யூவி காருக்கு  92,000 க்கு மேற்பட்ட விசாரிப்புகளுடன் 10,000 எஸ்யூவி மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காம்பஸ் எஸ்யுவி மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டீசல் எஞ்சின் 4X2  மைலேஜ் லிட்டருக்கு 17.1 கிமீ

டீசல் எஞ்சின் 4X4  மைலேஜ் லிட்டருக்கு 16.3 கிமீ

மேலும் 170 hp பவருடன்,  260 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் எஞ்சின் 4X2  மைலேஜ் லிட்டருக்கு 16.3 கிமீ

இரு எஞ்சின் மாடல்களிலும் 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது. 4×4 பெற்ற மாடலில் தானியங்கி,பனி,மனல் மற்றும் சேறு என மொத்தம் நான்கு வகையான டிரைவிவ் மோட் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் டீசல் மாடல்கள் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில், காலதாமதமாக பெட்ரோல் கார்கள் தீபாவளி-க்கு முன்னதாக டெலிவரி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; ஜீப் காம்பஸ் எஸ்யூவி விபரங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Recommended For You