லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் ரூபாய் 3.97 கோடி விலையில் லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது. 640 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினை பெற்று விளங்குகின்றது.

Lamborghini huracan Performante super car

Google News

ஹூராகேன் பெர்ஃபாமென்டி

  • ரூ. 3.97 கோடி விலையில் ஹூராகேன் பெர்ஃபாமென்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 640 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்  5.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • 2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

2018 lamborghini huracan performante super car

கடந்த மாதம் நடைபெற்ற 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட பெர்ஃபாமென்டி காரில் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம் இதோ..,

5.2 லிட்டர்  வி10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்  640 hp பவர் மற்றும் 600 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் பவரை சக்கரங்களுக்கு 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஹூராகேன் பெர்ஃபாமென்டி சூப்பர் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும்.

2018 lamborghini huracan performante suv

இலகு எடை மற்றும் உயர்தர பலமிக்க கார்பன் ஃபைபர் கம்போசிட் உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பெர்ஃபாமென்டி மாடல் சாதரன ரக ஹூராகேன் மாடலை விட சுமார் 40 கிலோ வரை எடை குறைவானதாக அமைந்துள்ளது.

சாதாரன ஹூராகேன் மாடலை விட மிகச் சிறப்பான ஏரோ டைனமிக்ஸ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது ,அதாவது சாதரன மாடலை விட சுமார் 750 சதவீத கூடுதல் டவுன்ஃபோரஸை இந்த மாடல் பெற்று விளங்குகின்றது.

2018 lamborghini huracan performante rr

லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி கார் ரூபாய் 3.97 கோடி டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

[foogallery id=”17422″]