இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLC 43 கூபே அறிமுக விபரம்

புனே அருகே அமைந்துள்ள சக்கன் ஆலையில் சிகேடி முறையில் தயாரிக்கப்படுகின்ற பெர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLC 43 கூபே காரினை நவம்பர் 3ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.

சர்வதேச அளவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வெளியான GLC 43 கூபே ரக மாடல் தற்போது இந்திய சந்தைக்கு பாகங்களை தருவித்து உள்நாட்டிலே ஒருங்கிணைக்கப்படுவதனால் விலை சற்று குறைவாக அமைந்திருக்கும். இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக ஏஎமஜி பெர்ஃபாமென்ஸ் கார்களை மெர்சிடிஸ் தாயரிக்க துவங்கியுள்ளது.

இந்த காரில் 3.0 லிட்டர் V6 பை டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 385 bhp பவர் மற்றும் 520 Nm டார்க் வழங்குகின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.6 விநாடிகளும், அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டிற்கு உரித்தான முன்புற கிரில் கொடுக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர்டேம் கொண்டதாகவும், பக்கவாட்டில் 19 அங்குல அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 19 முதல் 21 அங்குல அலாய் வீல்கள் ஆப்ஷனாக உள்ளது. இரட்டை பிரிவு பெற்ற புகைப்போக்கி மற்றும் எல்இடி டெயில் லைட் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் மிக ஆடம்பரமான பல்வேறு வசதிகளுடன் MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்றது.

web title : Made-In-India Mercedes-AMG GLC 43 Coupe Launch Date

Exit mobile version