ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா XUV300 ஏஎம்டி விற்பனைக்கு அறிமுகமானது

mahindra xuv300 amt

இந்தியாவின் மிக பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றான மஹிந்திரா XUV300  காரில் குறைந்த விலை ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு ரூ.9.99 லட்சத்தில் வந்துள்ளது.

முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற டீசல் ரக என்ஜின் கொண்ட மாடலில் வெளியிடப்பட்டுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது டாப் வேரியண்ட் W8 மற்றும் W8 (O) அடிப்படையில் கிடைத்து வந்தது. தற்போது W6 வேரியண்டில் வந்துள்ள மாடல் ரூ. 1.50 லட்சம் குறைவாக கிடைக்கின்றது. 117 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக அமைந்திருக்கின்றது. இந்த என்ஜினில் தற்போது 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. தற்போது டீசல் எக்ஸ்யூவி300 ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியை கொண்டுள்ளது.

மற்றபடி இந்த காரில் உள்ள வசதிகள் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற W6 வேரியண்டின் அடிப்படையிலே அமைந்துள்ளது. இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், டிரைவர் மற்றும் முன் பயணிகளுக்கு சீட் பெல்ட் நினைவூட்டல்கள், வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள். இருப்பினும், W6 ஏஎம்டி பதிப்புகளில் ரூஃப் ரெயில்கள், பின்புற ஸ்பாய்லர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், நான்கு ஸ்பீக்கர்கள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்கள் பெற்றுள்ளன. மேலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் (ESP) மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் பெற்றுள்ளது.

xuv300 amt

மஹிந்திரா XUV300 W6 – ரூ. 9.99 லட்சம்

மஹிந்திரா XUV300 W8 – ரூ. 11.35 லட்சம்

மஹிந்திரா XUV300 W8 (O) – ரூ. 12.55 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)