ரூ.15.45 லட்சத்தில் மஹிந்திரா XUV500 W9 வேரியன்ட் அறிமுகம்

0

mahindra xuv500 w9 varaint launchedஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மஹிந்திரா XUV500 மாடலில் W9 வேரியன்ட் ரூ.15.45 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா XUV500 W9

new mahindra xuv500 suv

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி மற்றும் வரவுள்ள ரெனோ கேப்சர் க்ராஸ்ஓவர் எஸ்.யூ.வி உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் எக்ஸ்யூவி 500 மாடலில் W8 , W10 ஆகிய இரு வேரியன்ட் மாடல்களுக்கு இடையில் W9 வேரியன்ட் கூடுதலான வசதிகளுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் W9 வேரியன்டில் கூடுதலாக ரிவர்ஸ் கேமரா, எலக்ட்ரிக் சன்ரூஃப், டைனமிக் அசிஸ்ட் மற்றும் மஹிந்திரா ஈக்கோசென்ஸ் நுட்பத்துடன், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது. இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி,அவசர கால அழைப்பு ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

new mahindra xuv500 ecosense

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. நடைமுறையில் உள்ள 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 140 bhp ஆற்றல் மற்றும் 330 Nm  டார்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது.

மஹிந்திரா W9 வேரியன்ட் விலை பட்டியல்

XUV500 W9 MT – ரூ.15.45 லட்சம்

XUV500 W9 AT – ரூ.16.53 லட்சம்