மாருதி எர்டிகா, சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வருகை விபரம்

0

2019 Maruti Ertiga Price

மாருதி சுசூகி நிறுவனத்தின், புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற மாருதி எர்டிகா, மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடல்களில் உள்ள 1.3 லிட்டர் டீசல் என்ஜின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.

Google News

பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட  ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தயாரிப்பை கைவிட உள்ளதால், மாருதி சொந்த தயாரிப்பாக புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு உட்பட்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஏப்ரல் 1,2020 க்கு முன்னதாக பிஎஸ் 6 மாசு நடைமுறைக்கு மாற உள்ளது.

94 HP பவர் மற்றும் 220 Nm டார்க் வழங்கவல்ல புதிய 1498 சிசி டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.  இந்த என்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க மாருதியின் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றிருக்கும். முதற்கட்டமாக மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எர்டிகா காரின் VDi, ZDi மற்றும் ZDi+ , சியாஸின் Delta, Zeta மற்றும் Alpha வேரியன்டுகளில் இடம்பெற உள்ளது. ஆனால் பேஸ் வேரியன்ட் மாடல்களான சியாஸ் சிக்மா மற்றும் எர்டிகா LDi  வேரியன்டில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் உற்பத்தி நிறுத்தும் வரை இடம்பெற்றிருக்கலாம்.

முதற்கட்டமாக சியாஸ் மற்றும் எர்டிகா கார்கள் பெற்று அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அடுத்த வருடம் முதல் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டீசையர் கார்களும் வரவுள்ளன.