13 ஆண்டுகளாக இந்தியாவின் நெ.1 கார் : மாருதி சுசுகி ஆல்டோ

0

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கார் 13வது முறையாக இந்தியாவின் முதன்மையான காராக சந்தையில் நிலைத்து நிற்கின்றது.

maruti alto k10 plus

Google News

மாருதி சுசுகி ஆல்டோ

  • 17 ஆண்டுகாளாக இந்திய சந்தையில் மாருதி ஆல்டோ விற்பனை செய்யப்படுகின்றது.
  • 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்தியாவில்அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.
  • ஆல்டோ 800 ,ஆல்டோ கே10 மற்றும் சிஎன்ஜி போன்ற மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றது.
  • 2016-2017 ம் நிதி ஆண்டில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki Alto 800

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் 16-17 ம் நிதி வருடத்தில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இந்தியாவின் முதன்மையான காராக விளங்கும் ஆல்டோ மாடலில் ஆல்டோ 800 , 1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்டோ கே10, ஆல்டோ சிஎன்ஜி உள்பட மூன்று விதமான ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.

கடந்த செப்டம்பர் 2000ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்டோ கார் முதல் மூன்று வருடங்களில் மொத்த விற்பனையே ஒரு லட்சத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் சரியாக 17 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நிதி வருடத்தில் 2.41 லட்சம் அலகுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 16-17 நிதி ஆண்டில் மாருதியின் மொத்த விற்பனை செய்யப்பட்ட 1,443,641 கார்களில் 17 சதவீத பங்களிப்பை மாருதி ஆல்டோ பதிவு செய்துள்ளது.

Maruti Suzuki Alto 800 Onam Limited Edition interior

47.5 பிஹெச்பி ஆற்றலுடன் , 69 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 800சிசி எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

68 பிஹெச்பி ஆற்றலுடன் , 90 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 999சிசி எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக அமைந்துள்ள ஆல்டோ கார் குறைவான பராமரிப்பு செலவு ,  சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்குவதாக மாருதி நிர்வாக இயக்குநர் கல்சி தெரிவித்துள்ளார்.

new Maruti Alto 800

Maruti Alto K10 Urbano Rear