மாருதி சுசூகியின் சுசூகி கனெக்ட் ரூ.9999-க்கு வெளியானது

0

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் , டெலிமேட்டிக்ஸ் முறையில் அதிநவீன சேவைகளை வழங்கும் நோக்கில் சுசூகி கனெக்ட் என்ற பெயரில் ரூ.9999 விலையில் பாதுகாப்பு, தரம் சார்ந்த அம்சங்களை பயனாளர்கள் பெற வழி வகுக்கின்றது.

மாருதியின் பிரிமியம் ரக டீலர்களாக விளங்கும் நெக்ஸா வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ள சுசூகி கனெக்ட் டெலிமெட்டிக்ஸ் கருவியின் வாயிலாக பல்வேறு சேவைகளை பெறும் நோக்கில் முதற்கட்டமாக இந்நிறுவனத்தின் பிரிமியம் ரக மாடல்களாக விளங்கும் பலேனோ , இக்னிஸ், நெக்ஸா , எஸ்- கிராஸ் போன்ற மாடல்கள் பயன்பெறும் வகையில் இந்த கருவியை சுசூகி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Google News

சுஸூகி கனெக்ட் வாயிலாக அவசரகால உதவி, வெய்கிள் டிராக்கிங், நிகழ்நேர வாகன இருப்பிடம் அறிய, ஓட்டுநரின் பழக்க வழக்கங்களை அறிய உதவும் நோக்கில் அமைந்துள்ள இந்த சிஸ்டத்தை காரில் இணைத்துக் கொள்ள மாருதி நெக்ஸா வாயிலாக பெற ரூ.9999 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். இதன் தகவல் விபரங்களை பெற நெக்ஸா ஆப் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்த சிஸ்டத்தின் ஆதரவுடன்  Telematics Control Unit (TCU) என்ற நுட்பத்தின் மூலம் வாகனத்தின் தகவல்களை நெக்ஸா செர்வர் வாயிலாக செல்லுலார் இணைப்பின் மூலம் இணைக்கபடுவதனால் இதனை சேதப்படுத்தி தகவல்களை சிதைக்க இயலாது என மாருதி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நுட்பத்தை காரை இணைப்பதில் நாடு முழுவதும் 2800க்கு மேற்பட்ட டெக்னிஷியன்களுக்கு இந்நிறுவனம் பயற்சி வழங்கியுள்ளது.