ரூ.8.31 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி சியாஸ் எஸ் விற்பனைக்கு வெளியானது

 maruti suzuki ciaz s

இந்தியாவின் நடுத்தர ரக செடான் மாடலான மாருதி சுசுகி சியாஸ் காரில் பிஎஸ் 6 என்ஜின் மற்றும் கூடுதலாக சியாஸ் எஸ் என்ற ஸ்போர்ட்டிவ் மாடலும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய சியாஸ் மாடல் இந்நிறுவனத்தின் 11வது மாடலாக பிஎஸ் 6 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள அல்பா வேரியண்டின் அடிப்படையில் புதிய டாப் வேரியண்டாக சியாஸ் எஸ் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட செடான் ரக சியாஸ் மாடல் 2 லட்சத்து 70 ஆயிரம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இந்த செடான் பிரிவில் 29 சதவீத பங்களிப்பினை கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய சியாஸ் எஸ்  வேரியண்டில் தோற்ற அமைப்பினை பொறுத்தவரை, இரு வண கலவையை பெறும் வகையில் பக்காவாட்டிலும், பின்புறத்தில் ஸ்பாய்லரிலும் கருப்பு நிறத்தை கொண்டிருப்பதுடன் கூடுதலாக டரங் லிட் ஸ்பாய்லர், ஓஆர்விஎம் கவர், மற்றும் முன் பனி விளக்கு கார்னிஷ் போன்றவற்றிலும் கருப்பு நிறம் இணைக்கப்பட்டுள்ளது. 16 அங்குல அலாய் வீல், சிவப்பு, வெள்ளை மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை இந்த வேரியண்ட் பெற உள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரை, கருமை நிறத்துக்கு முக்கியத்த்துவம் கொடுக்கப்பட்ட இன்டிரியர், சில்வர் இன்ஷர்ட் போன்றவை கொண்டுள்ளது.

புதிய மாருதி சியாஸ் விலை பட்டியல்

CIAZ BS6 Price ex-sh CIAZ BS6 Price ex-sh
Sigma (MT) 8.31 லட்சம் Delta (AT) 9.97 லட்சம்
Delta (MT) 8.93 லட்சம் Zeta (AT) 10.80 லட்சம்
Zeta (MT) 9.70 லட்சம் Alpha (AT) 11.09 லட்சம்
Alpha (MT) 9.97 லட்சம்
S (MT) 10.08 லட்சம்

 

குறிப்பாக முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.11,000 முதல் ரூ.22,000 வரை விலையை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. புதிய மாருதி சியாஸ் பிஎஸ் 6 மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பெற்றுள்ளது. சியாஸில் உள்ள 1.5 லிட்டர் கே 15 ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 ஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.

 maruti suzuki ciaz s