புதிய வசதிகளுடன் வெளியானது மாருதி சுசூகி எஸ் கிராஸ்

0

மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ரூ. 8.85 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம் தனது எஸ் கிராஸ் கார்களுக்கான விலையை உயர்த்தியுள்ளதோடு, புதிய வசதிகளுடன் வெளியிட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையாக 8.85 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மாருதி சுசூகி கார் வகைகளில் இல்லாத வகையில் இந்த எஸ் கிராஸ் கார்களில் கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட எஸ் கிராஸ் கார்களின் ஆரம்பாமாக சிக்மா வகை கிராஸ்ஓவர்கள் தற்போது 8.85 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே டாப்-ஸ்பெக் ஆல்பா வகையாக இருந்தால் அந்த காரின் விலை 11.45 ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மேம்படுத்தப்பட்ட எஸ் கிராஸ் கிராஸ்களில், வழக்கத்தை விட, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, டூயல் பிராண்ட் ஏர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS, ISOFIX குழந்தைகளுக்கான சீட் பொருத்தும் இடம் மற்றும் சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனேர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

மிட்-ஸ்பெக் டெல்ட்டா டிரிம் எஸ்-கிராஸ் கார்களில் கூடுதலாக, இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், குருஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக்கல் முறையில் மடித்து கொள்ளவும், அட்ஜஸ்ட் செய்யவும் முடியும் ORVMகள் இடம் பெற்றுள்ளது. இந்த அனைத்து வசதிகளும் ஜெடா மற்றும் ஆல்பா வகைகளிலும் பின்னர் அப்டேட் செய்யப்பட உள்ளது.

மாருதி எஸ்-கிராஸ் கார்களில், 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளது. இது 88.5bhp மற்றும் 200Nm டார்க்யூ-வை உருவாக்கும். இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் இன்ஜின்களில், சுசூகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிரேக்கிங் வசதிகளையும் கொண்டுள்ளது.

கூடுதலாக, வழக்கமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் புதிய வசதிகளும் மிட்-ஸ்பெக் டெல்ட்டா வகைகளில் இடம் பெற்றுள்ளது. இதனால், எஸ் கிராஸ் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட விலைகளுக்கு ஏற்ப, எஸ் கிராஸ்களில் புதிய வசதிகள் மற்றும் முக்கியமாக அதிகளவிலான பாதுகாப்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி எஸ்-கிராஸின் விரிவான விலை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வகைகள் பழைய விலை புதிய விலை
சிக்மா ரூ 8.61 லட்சம் ரூ 8.85 லட்சம்
டெல்ட்டா ரூ 9.42 லட்சம் ரூ 9.97 லட்சம்
ஜெடா ரூ 9.98 லட்சம் ரூ 10.45 லட்சம்
ஆல்பா ரூ 11.32 லட்சம் ரூ 11.45 லட்சம்

குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோ ரூம் விலை (டெல்லியில்)