145 நாட்களில் 1 லட்சம் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை

இந்தியாவின் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றாக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த 45 நாட்களில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்

ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் முந்தைய மாடலை விட மாறுபட்ட புதிய HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பான இடவசதி , நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

பலேனோ, இக்னிஸ் , டிசையர் ஆகிய கார்களை தொடர்ந்து அதே பிளாட்பாரத்தில் வெளியான ஸ்விஃப்ட் மிக சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்டு விளங்குவதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெற்றிருக்கின்றது. சுசுகி ஸ்விஃப்ட் காரில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 20 மில்லியன் கார்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ள நிலையில், 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார் விற்பனை எண்ணிக்கை 1.89 மில்லியனை கடந்துள்ளது.