Automobile Tamil

ஏப்ரல் 2020 முதல் மாருதி சுசூகி டீசல் கார்கள் நீக்கப்படுகின்றது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், ஏப்ரல் 2020 முதல் டீசல் என்ஜின் கொண்ட கார்களை விற்பனையிலிருந்து நீக்க உள்ளதாக அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. டீசல் கார்களுக்கு மாற்றாக ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளது.

இந்தியாவில் மாருதியின் ஒட்டுமொத்த கார் விற்பனை சந்தையில் தற்போது 23 சதவிகித பங்களிப்பை டீசல் என்ஜின் பெற்ற மாடல்கள் வழங்கி வருகின்றது.

மாருதி சுசூகி டீசல் கார்கள்

இந்தியாவின் மாருதி சுசூகி தலைவர் ஆர்.சி. பர்கவா கூறுகையில், ஏப்ரல் 1, 2020 முதல் நாங்கள் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்ய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய என்ஜின் என அழைக்கப்படுகின்ற ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பெரும்பாலான இந்திய கார்களில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாருதியின் ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர், சியாஸ், பிரெஸ்ஸா உட்பட டாடா நிறுவனத்தின் இன்டிகா, ஜெஸ்ட், போல்ட், மற்றும் ஃபியட் நிறுவன புன்ட்டோ, லீனியா, அவன்ச்சூரா போன்றவை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் அதிகப்படியான விலை உயர்வின் காரணமாக பிஎஸ் 6 நடைமுறைக்கு இந்த என்ஜின் மேம்படுத்தம் திட்டத்தை ஃபியட் கைவிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கார்களில் மாருதி இந்த என்ஜினை நீக்க உள்ளது.

ஆனால் மாருதி சுசூகி நிறுவனம், ரூ.1000 கோடி முதலீட்டில் உற்பத்தி செய்துள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உருவாக்கியுள்ளது. முதன்முறையாக இந்த என்ஜின் சியாஸ் காரில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட அளவில் ட்டும் இந்த என்ஜின் உற்பத்தி செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான சிறிய ரக மாருதி கார்கள் பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ளது.

மேலும் மாருதியின் வர்த்தக ரீதியான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி சூப்பர் கேரி மாடலிலும் டீசல் என்ஜின் நீக்கப்பட்டு , பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகையில் மட்டும் கிடைக்க உள்ளது.

குறிப்பாக மாருதி சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டும் டீசல் என்ஜினில் கிடைக்க உள்ளது.

Exit mobile version