புதிய மாருதி எக்ஸ்எல்6 காரின் படங்கள் வெளியாகியுள்ளது

0

மாருதி சுசுகி எக்ஸ்எல்6

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அறிமுக செய்ய உள்ள 6 சீட்டர் பெற்ற மாருதி எக்ஸ்எல்6 காரின் தோற்ற அமைப்பு படங்கள் முழுதாக வெளியாகியுள்ளது. நீண்ட தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்ற கேப்டன் இருக்கைகள் கொண்ட இந்த மாடல் கிராஸ்ஓவர் ரக ஸ்டைலுடன் அமைந்துள்ளது.

Google News

ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாக உள்ள புதிய 6 இருக்கை கொண்ட இந்த மாடலில் பல்வேறு சிறப்புகளுடன் விளங்க உள்ளது. குறிப்பாக எர்டிகா காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் ரக மாடலாக விளங்க உள்ளது.

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6 என பெயரிடப்பட்ட, எம்பிவி எர்டிகாவிலிருந்து வடிவமைப்பு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது. இந்த மாடலை விட மிக வித்தியாசமான முறையில் பெரிய கிரில் மற்றும் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய பம்பர்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீல் ஆர்சுகளில் பிளாக் கிளாடிங் பெற்றதாகவும், முன் மற்றும் பின்புறத்தில் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது. எக்ஸ்எல் 6 விற்னையில் உள்ள எர்டிகாவை விட சற்றே அதிகமான கிரவுண்ட் கிளியரண்ஸ் என்பதை படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலான அலாய் வீல், டெயில் விளக்குகள், கதவுகள் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றை பெற்றதாக விளங்கும்.

எர்டிகா மற்றும் சியாஸில் இடம்பெற்றுள்ள சமீபத்திய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 104.7 பிஎஸ் குதிரைத்திறனையும், 138 என்எம்  முறுக்குவிசையையும் வழங்குகின்றது. இந்த என்ஜினின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான மாடலாக வரவுள்ள இந்த காரில் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6

மாருதி சுசுகி எக்ஸ்எல் 6 எர்டிகாவின் விலை ரூ. 7.45-9.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விற்பனை செய்யப்படுகின்றது. மஹிந்திரா மராஸ்ஸோ, இன்னோவா கிரிஸ்ட்டா போன்ற மாடல்களுடன் சில எஸ்யூவி ரக மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த உள்ளது. சாதாரன மாடலை விட மாருதி சுசுகி எக்ஸ்எல்6 விலை ரூ. 8 லட்சம் என தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

image source – gaadiwaadi