மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் GT ரோட்ஸ்டெர் விற்பனைக்கு வந்தது

பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களில் பிரசத்தி பெற்று விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் என இரு சூப்பர் கார் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

Mercedes AMGGT R fr view

சமீபத்தில் இந்தியாவின் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் டிராக்கில் மிக வேகமாக லேப் நிறைவு செய்து புதிய சாதனையை பதிவு செய்த 2:09.853 நேரத்தில் GT-R பதிவு செய்துள்ளது. ரூ.2.19 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் மாடலும் மற்றும் ரூ.2.23 கோடியில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R  விற்பனைக்கு வந்துள்ளது.

2017 Mercedes AMG GT Roadster

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R

மெர்சிடிஸ் ஏஎம்ஜி GT-R ஸ்போர்ட்ஸ் கார் Beast of the Green Hell என்கின்ற டேக்லைனுடன் வெளியிடப்பட்டுள்ள 4.0 லிட்டர் V8 பைடர்போ என்ஜின் 577 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 700 Nm ஆகும். 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Mercedes AMGGT R side

AMG GT-R ஸ்டீரிட் லீகல் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 318 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். விற்பனையில் உள்ள ஜிடி எஸ் காரை விட 8 கிமீ வேகம் கூடுதலாகுவும் , 0 முதல் 100 கிமீ வேகத்தினை 0.2 விநாடிகள் குறைவான நேரத்திலும் எட்டும்.

மிகச்சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களை கொண்ட மாடலாக வெளியாகியுள்ள AMG GT-R மாடலில் சிறப்பான முன்பக்க கிரில் அமைப்பு , பக்கவாட்டில் அமைந்துள்ள 10 ஸ்போக் கொண்ட 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் , பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , டபுள் ரியர் டிஃப்யூசர் என பலவற்றை பெற்றுள்ளது.

Mercedes AMGGT R rr

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர்

ஜிடி ஆர் மாடலை போலவே அமைந்துள்ள கன்வெர்டிபிள் ரோட்ஸ்டெர் காரில் பவர்ஃபுல்லான 476 hp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் V8 பைடர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 630 Nm ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

2017 Mercedes AMG GT Roadster

AMG GT-R ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 302 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.0 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

இரு இருக்கை ஆப்ஷனுடன் 5 விதமான டிரைவிங் மோடினை பெற்றதாக 19 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் மற்றும் 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் பெற்றதாக கிடைக்கின்றது.

2017 Mercedes AMG GT Roadster Side Profile

2017 Mercedes AMG GT Roadster Rear

விலை பட்டியல்

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT-R – ரூ. 2.23 கோடி

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GT ரோட்ஸ்டெர் – – ரூ. 2.19 கோடி

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)