ரூ.52.75 லட்சத்தில் புதிய மெர்சிடிஸ் GLC விற்பனைக்கு வெளியானது

0

Mercedes GLC Facelift

மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் GLC எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச அளவில் பல நாடுகளில் புதிய மாடல் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

Google News

புதிய மெர்சிடிஸ் ஜி.எல்.சி புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. வடிவமைப்பினை பொறுத்தவரை, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்களை சிறியதாகவும், அதிகமாக திருத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில் விளக்குகள் உள்ளன. எல்இடி ஹெட்லேம்ப் நிரந்தரமாகவும், ஆப்ஷனலாக எல்இடி மல்டிபீம் ஹெட்லேம்ப் வழங்கப்படுகின்றது.

உட்புறத்தில், புதிய மெர்சிடிஸ் ஜி.எல்.சி காரில் சமீபத்திய தலைமுறை MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் 10.25 இன்ச் ஃபீரி ஸ்டாண்டிங் மல்டிமீடியா டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மிக முக்கியமாக, புதிய மல்டிமீடியா காட்சி தொடுதிரை திறனை வழங்குகிறது. குரல் கட்டுப்பாட்டு செயல்பாடு பெற்று இதனை அனுக எளிய “Hey Mercedes” என அழைத்தால் இணைக்க இயலும்.

ஜி.எல்.சி 200 மாடலில் M 264 பெட்ரோல் என்ஜின் 2.0 லிட்டர் பயன்படுத்தப்பட்டு 197 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வழங்குகின்றது. 7.8 வினாடிகளுக்குள் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளது.

Mercedes GLC Facelift

புதுப்பிக்கட்ட ஜி.எல்.சி 220டி 4 மேட்டிக் OM 654 டீசல் என்ஜின் 2.0 லிட்டர் பெற்று 194 பிஎஸ் மற்றும் 400 என்எம் வழங்குகின்றது. 7.9 வினாடிகளுக்குள் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளது.

இரண்டு என்ஜினிலும் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் GLC 200 (பெட்ரோல்) – ரூ. 52.75 லட்சம்

புதிய மெர்சிடிஸ் GLC 220 d 4MATIC (டீசல்) – ரூ. 57.75 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Mercedes GLC Facelift