இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்

0

mercedes benz edition c launchedஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனத்தின் C கிளாஸ் காரின் அடிப்படையில் எடிசன் சி (Edition C) என்ற பெயரில் சிறப்பு மாடலை ரூ.42.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் எடிசன் சி

mercedes benz c class edition c

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வசதிகளை பெற்ற மாடலாக இந்த எடிசன் சி விற்பனைக்கு மூன்று வகையான ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு எடிசனில் சிவப்பு நிறத்துக்கு (Hyacinth red) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தோற்ற அமைப்பில் முன்புறத்தில் லிப் ஸ்பாய்லர், பின்புற ஸ்பாய்லர் கருப்பு வண்ணத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு நிறத்தை பெற்ற அலாய் வீல், முன்பக்க கதவுகளில் Edition C பேட்ஜை புராஜெக்டர் வாயிலாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கருப்பு நிறத்தில் மிரர் ஹவுசிங், சைட் ஸ்கர்ட் மற்றும் பெல்ட்லைன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

mercedes benz edition c dashboard

ஸ்பெஷல் எடிசன் சி கிளாஸ் மாடலின் இன்டிரியரில் கருப்பு ஆஸ் வுட் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஸ்போர்டு பெற்றுள்ளது. ஸ்டெயின்லெஸ் பெடல்கள், கார்மின் மேப் பைலட் எஸ்டி நேவிகேஷன் சிஸ்டத்தை கொண்டதாக வந்துள்ளது.

சி கிளாஸ் மாடல் அடிப்படையில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

C 200 Avantgarde Edition C ரூ. 42.54 லட்சம்

C 220 d Avantgarde Edition C ரூ. 43.54 லட்சம்

C 250 d Avantgarde Edition C ரூ. 46.87 லட்சம்

மேலும் மெர்சிடிஸ்-பென்ஸ் அறிக்கையில் இந்தியாவில் சி கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்ட தேதி முதல் இன்று வரை 27,500 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.