மெர்சிடிஸ் SLC 43 AMG சொகுசு கார் விற்பனைக்கு வந்தது

பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி பிராண்டில் மெர்சிடிஸ் SLC 43 AMG ரோட்ஸ்டர் ரக சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் விலை ரூ.77.50  லட்சம் ஆகும். மெர்சிடிஸ் SLK ரோட்ஸ்டர் காரின் மேம்படுத்தப்பட்ட 43 பேட்ஜ் கொண்ட மாடலாக மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி விளங்கும்.

mercedes-SLC-43-AMG

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் 43 பேட்ஜ் பெற்ற மாடலாக விளங்கும் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி சொகுசு காரின் மேற்கூறை இல்லாத மாடலாக ஃபோல்டிங் கடின டாப் 40 கிமீ வேகத்தில்  திறந்து மற்றும் மூடிக்கொள்ளும்.

முந்தைய எஸ்எல்கே மாடலை விட கூடுதலான மாற்றங்களை தோற்றம் மற்றும் உட்புறத்திலும் பெற்றுள்ள எஸ்எல்சி 43 ஏஎம்ஜி மாடலின் முன்பக்கத்தில் வழக்கம்போல மிக பெரிய 3 புள்ளிகளை கொண்ட நட்சத்திர மெர்சிடிஸ்-பென்ஸ் லோகோ மற்றும் ஒற்றை க்ரோம் ஸ்லாட் பெற்றுள்ளது. மேலும் புதிய முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்கு , முன் மற்றும் பின் பம்பர்கள் புதுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பின்புறத்தில் புதிய புகைப்போக்கி , மாற்றியமைக்கப்பட்ட எல்இடி டீடெயிங் மற்றும் டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.

Mercedes-AMG-SLC-43-interior

இன்டிரியரில் புதிய கமான்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , புதிய ஸ்டீயரிங்வீல் , மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , தானியங்கி முறையில் செயல்படும் லக்கேஜ் கவரினால் எவ்விதமான மெனுவல் செயல்பாடும் தேவையிருக்காது. ஏஎம்ஜி ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் மற்றும் ஏஎம்ஜி பாடி கிட்ஸ் போன்றவை உள்ளது.

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி காரில் பொருத்தப்பட்டுள்ள 3.0லிட்டர் பை-டர்போ, வி6 இஞ்ஜின்  367 hp ஆற்றல் மற்றும் 520Nm டார்க் வெளிப்படுத்தும். ஆற்றலை சக்கரங்கள் பெறுவதற்கு 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

0 முதல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 4.7 நொடிகளில் மட்டும் எடுத்துக்கொள்ளும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் ஆக எலக்ட்ரானிக் முறையின் மூலம் வரையறைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் SLC 43 AMG  கார் விலை ரூ.77.50 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

2016-Mercedes-Benz-SLC-43-AMG-side

mercedes-SLC-43-AMG-rear