ரூ.13.63 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் காரின் சிறப்பு பதிப்பு வெளியானது

Mg Hector Anniversary Edition

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஹெக்டர் எஸ்யூவி காரின் சிறப்பு ஆண்டுவிழா பதிப்பினை சூப்பர் வேரியண்டின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

எம்.ஜி. ஹெக்டர் மாடலில் வழங்கபட்டுள்ள பெட்ரோல், ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று என்ஜின் ஆப்ஷன் பெற்றுள்ளது.  143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது.

கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டரின் சிறப்பு ஆண்டுவிழா பதிப்பில் தோற்ற அமைப்பு மற்றும் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. கூடுதலாக, வயர்லெஸ் மொபைல் சார்ஜர், ஏர் ப்யூரிஃபைர், Medklinn இன் கார் கிட் மற்றும் 26.4cm டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஆனிவர்ஸரி எடிசன் பெட்ரோல் – ரூ.13.63 லட்சம்

எம்ஜி ஹெக்டர் ஆனிவர்ஸரி எடிசன் டீசல் – ரூ.14.99 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

விரைவில், எம்ஜி நிறுவனம் குளோஸ்டர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.