எம்ஜி குளோஸ்டெர் எஸ்யூவி விலை மற்றும் சிறப்புகள்

0

mg gloster

எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள பிரீமியம் குளோஸ்டெர் எஸ்யூவி பல்வேறு சிறப்புகளுடன் ரூ.28.98 லட்சம் ஆரம்ப முதல் அதிகபட்சமாக ரூ.35.38 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லெவல்-1 தன்னாட்சி நுட்பம் அல்லது அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் (ADAS) கொண்டதாக குளோஸ்டர் விளங்குகின்றது.

Google News

சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் ஸேவி என நான்கு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ள இந்த காரின் சூப்பர் வேரியண்டில் 7 இருக்கைகளும், ஸ்மார்ட் மற்றும் ஸேவி-ல் 6 இருக்கைகளும், ஷார்ப் வேரியண்டில் 6 மற்றும் 7 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளது.

எம்ஜி குளோஸ்டெர் எஸ்யூவி

பிரமாண்டமான தோற்ற அமைப்பினை கொண்ட குளோஸ்டெர் எஸ்யூவி காரில் இரு விதமான பவரை வழங்குகின்ற 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சூப்பர், ஷார்ப் வேரியண்டில் இடம்பெற்றுள்ள ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஸ்மார்ட், ஸேவி வேரியண்டில் இடம்பெற்றுள்ள ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

mg gloster

எம்ஜி குளோஸ்டெர் ADAS என்றால் என்ன ?

இந்தியாவில் முதன்முறையாக Level-1 தன்னாட்சி நுட்பத்தை வழங்குவதனை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ADAS (advanced driver assistance systems) என பெயரிடப்பட்டுள்ள நுட்பம் வாகன ஓட்டுதலில் ஓட்டுநர் எதிர்கொள்ளுகின்ற அடிப்படையான சிரமங்களை பெருமளவில் குறைக்கின்றது.
இந்த அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.

எம்ஜி குளோஸ்டெர் டிரைவிங் மோட் ?

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்ற டாப் வேரியண்டுகளில் பனி, மனல், பாறை, சேறு, ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஆட்டோ மொத்தம் 7 விதமான டிரைவிங் மோடுகள் பெற்றுள்ளது.

 

குளோஸ்டரின் இன்டிரியரில் 8.0 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ப்ளூடூத் இணைப்புடன் 12.3 அங்குல எச்டி தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி கேபின் விளக்குகள், மூன்று மண்டல ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, கேப்டன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் போன்றவை கவனிக்கதக்கதாகும்.

எம்ஜி ஐஸ்மார்ட் 2.0 கனெக்ட்டிவிட்டி வாயிலாக 70 க்கு மேற்பட்ட அம்சங்களை வழங்கும் காராக விளங்குகின்ற இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதிகளை வழங்குகின்றது.

குளோஸ்டெரின் பாதுகாப்பு அம்சங்களில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ள எம்ஜி நிறுவனம் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி), டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ரோல் இயக்கம் தலையீடு, ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டெசண்ட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூஷன் (ஈபிடி), பிரேக் அசிஸ்ட், டிஸ்க் பிரேக்குகளுடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் யார் ?

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்டு எண்டோவர், மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 போன்றவற்றை எம்ஜி குளோஸ்டர் எதிர்கொள்ளுகின்றது.

எம்ஜி குளோஸ்டெர் விலை பட்டியல்

MG Gloster price
Variant Price (ex-showroom India)
Super (7-seater) ரூ.28.98 லட்சம்
Smart (6-seater) ரூ.30.98 லட்சம்
Sharp (7-seater) ரூ.33.68 லட்சம்
Sharp (6-seater) ரூ.33.98 லட்சம்
Savvy (6-seater) ரூ.35.38 லட்சம்

 

mg gloster pricelist

எம்ஜி குளோஸ்டர் அறிமுக சலுகையாக ரூ.50,000 மதிப்புள்ள எம்ஜி ஷீல்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

web title – MG Gloster SUV launched in India – Tamil car news