Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது

by MR.Durai
26 June 2020, 8:44 am
in Car News
0
ShareTweetSend
honda city car
புதிய ஹோண்டா சிட்டி கார்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் புத்தம் புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி காருக்கு முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

2020 ஹோண்டா சிட்டி காரின் நீளம் 100 மிமீ வரையும், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது.  உயரம் இப்போது 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் 16 அங்குல அலாய் வீல், சன் ரூஃப் போன்றவற்றை கொண்டிருக்கும்.

அதிகபட்சமாக 121 ஹெச்பி பவரை வழங்குகின்ற புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ARAI சான்றிதழ்படி மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ (6 வேக மேனுவல்) மற்றும் 18.4 கிமீ (சிவிடி ஆட்டோ) வழங்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் வழங்கப்பட உள்ளது.

இந்திய சந்தையில் முதன்முறையாக அலெக்ஸா ஆதரவு பெற்றதாக வரவுள்ள சிட்டி காரில் 8.0 அங்குல இன்ஃபோயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் ஹோண்டா கனெக்ட் எனப்படும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த 32 வசதிகளை வழங்குகின்றது.

புதிய ஹோண்டா சிட்டி கார்
புதிய ஹோண்டா சிட்டி கார் இன்டிரியர்

7.0 டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆட்டோ டிம் IRVM, எலக்ட்ரிக் சன் ரூஃப் என பல்வேறு வசதிகளுடன் பேடெல் ஷிஃப்டர், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி கோ மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்றவற்றை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Related Motor News

ஹோண்டா கார்களுக்கு ரூ.95,500 வரை ஜிஎஸ்டி பலன்கள்..!

ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 2025ல் 76,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

ஏப்ரல் 2025 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

ஹோண்டா கார்களுக்கு ரூ.90,000 தள்ளுபடி மார்ச் 2025ல் அறிவிப்பு..!

2025 ஹோண்டா சிட்டி அபெக்ஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

Tags: Honda City
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan