ரூ.6.80 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வெளியானது

0

all new hyundai i20 launched 1

இந்தியாவின் அதிக மைலேஜ் தருகின்ற டீசல் கார் என்ற பெருமையுடன் புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த ஹூண்டாய் ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற்றதாக அமைந்துள்ளது.

Google News

புதிய ஐ20 கார் இன்ஜின்

5 வேக மேனுவல் மற்றும் ஐவிடி (சிவிடி) கியர்பாக்ஸ் பெற்ற 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி (88hp – cvt) குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 19.65 கிமீ வழங்கும் என ஆராய் சான்றிதழ் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜ் வழங்குகின்ற  1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 100 பிஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

இறுதியாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட உள்ளது. 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜ் வழங்கும்.

2020 hyundai i20 interior

ஐ20 காரின் டிசைன்

மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சத்தைப் பெற்ற ஹூண்டாய் ஐ20 காரின் முகப்பு கேஸ்கேடிங் கிரில் மிக நேர்த்தியாகவும், புதிய ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் போன்றவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு அம்ப்பில் மிக நேர்த்தியான அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் Z வடிவ எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஐ20 காரின் இன்டிரியரில் 50க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுகின்ற 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூலிங்க் டெக்னாலஜி சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஐ20 காரில் Magna, Sportz, Asta, மற்றும் Asta (O) என நான்கு விதமான வேரியண்டில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் 5 விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு மொத்தம் 13 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.

2020 hyundai i20 cabin

ஐ20 காரின் பாதுகாப்பு வசதிகள்

டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி பிரேக், டயர் பிரெஷர் மானிட்டர் , ஹீல் அசிஸ்ட் கன்ட்ரோல், வெய்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஐ20 காரின் போட்டியாளர்களாக சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்றவை விளங்க உள்ளது.

ஹூண்டாய் ஐ20 கார் விலை பட்டியல்

Engines Magna Sportz Asta Asta (O)
1.2-litre 5MT ₹ 6,79,900 ₹ 7,59,900 ₹ 8,69,900 ₹ 9,19,900
1.2-litre IVT ₹ 8,59,900 ₹ 9,69,900
1.0-litre IMT ₹ 8,79,900 ₹ 9,89,900
1.0-litre 7DCT ₹ 10,66,900 ₹ 11,17,900
1.5-litre D 6MT ₹ 8,19,900 ₹ 8,99,900 ₹ 10,59,900

வழங்கப்பட்டுள்ள உள்ள விலை எக்ஸ்ஷோரூம் இந்தியா. வரும் டிசம்பர் 31,2020 வரை மட்டும் இந்த ஐ20 காரின் அறிமுக விலை பிறகு உயர்த்தப்பட உள்ளது.

2021 Hyundai i20 Rear

web title : New Hyundai i20 launched at Rs 6.80 lakh