5 ஸ்டார் ரேட்டிங்.., கிராஷ் டெஸ்டில் அசத்தும் டாடா அல்ட்ராஸ் கார்

0

Altroz-NCAP-5-Stars

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் இரண்டாவது மாடலாக டாடாவின் அல்ட்ராஸ் கார் குளோபல் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. முன்பாக டாடா நெக்ஸான் கார் முதன்முறையாக உயர்தர பாதுகாப்பு சார்ந்த மதிப்பீட்டை பெற்ற காராக விளங்கி வருகின்றது.

Google News

உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme – Global NCAP)  சோதனைகளின் முடிவில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக அல்ட்ராஸ் காருக்கு 5 நட்சத்திர மதிப்பீட்டு தரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22, 2020 அன்று இந்த புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் அறிமுகப்படுத்தப்பட உள்ள நேரத்தில் முடிவுகள் வந்துள்ளன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அல்ட்ரோஸில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி , கார்னர் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு, இருக்கை பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் மற்றும் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் இருக்கைகள் பெற்ற இந்த மாடலில்,  முன்புற  ஆஃப்செட் மோதல் மற்றும் பக்கவாட்டு மோதல் ஏற்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.

குளோபல் என்சிஏபி அறிக்கையில் அல்ட்ரோஸ் ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் தலை, கழுத்து மற்றும் முழங்கால்களுக்கு நல்ல பாதுகாப்பையும், மார்புக்கு போதுமான பாதுகாப்பையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அல்ட்ராஸின் பாடிஷெல் மிக சிறப்பு நிலையானது.

tata altroz star rating

வயதுவந்தோர் பாதுகாப்பில் அல்ட்ராஸ் மாடலுக்கு 17 புள்ளிகளில் 16.13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 29 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. 1.5 வயதான குழந்தை டம்மிக்கு பாதுகாப்பு சிறப்பாகவும், 3 வயது குழந்தை பாதுகாப்பில் மட்டும் இருக்கை அமைப்பில் சற்று பின்னடவை சந்தித்துள்ளது. எனவே, இதில் மட்டும் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.