Automobile Tamilan

புதிய வால்வோ கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ மட்டுமே..!

ஒவ்வொரு புதிய வால்வோ கார்களும் இனி அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் மட்டும் பயணிக்கும் திறனுடன் கட்டுப்படுத்தப்படிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வேகத்தை அதிகரிக்க கேர் கீ (Care key) என்ற அம்சத்தை பயன்படுத்தி 180 கிமீ-க்கு கூடுதலான வேகத்தை அதிகரிக்கலாம்.

தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, பூஜ்ய விபத்து என்ற நோக்கத்தை தொடர்ந்து ஸ்வீடிஷ் வால்வோ நிறுவனம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. கடந்த ஆண்டு வால்வோ வெளியிட்டிருந்த அறிக்கையில், புதிய வரைமுறைகளை அறிமுகப்படுத்தி விபத்து மற்றும் உயிரிழப்பினை முழுமையாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

கேர் கீ என்ற அம்சத்தின் வாயிலாக அனுபவமிக்க ஓட்டுநர் கூடுதலாக வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இளையோர் அல்லது குறைந்த அனுபவம் உள்ளர்வர்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையிலான வசதியாக வழங்கியுள்ளது.

வேக நிர்ணயம் பற்றி வால்வோ கார்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவர் மாலின் எகோல்ம் கூறுகையில்,  “போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காக கார் தயாரிப்பாளருக்கு மிக முக்கிய பொறுப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமும், இது தொடர்பான விவாதுமும், வேகம் எவ்வளவு ஆபத்தானது என்பதனை எளிதாக உணர இயலும், இதனால் ஓட்டுநரின் மன அமைதியும் மேம்படும், எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version