ஜன., 1 முதல் நிசான் கார்கள் விலை ரூ.15,000 வரை உயருகின்றது

0

nissan micra fashion orangeஇந்தியா சந்தையில் செயல்பட்டு வரும் நிசான் இந்தியா குழுமத்தின் நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் உள்ள கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட உள்ளது.

நிசான் கார்கள் விலை

datsun redigo

பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை அதிகபட்சமாக 3 % வரை உயர்த்தியுள்ளதை தொடர்ந்து நிசான் நிறுவனமும் விலை உயர்வை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து நிசான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘  அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலையின் காரணமாக வருகின்ற ஜனவரி 1, 2018 முதல் நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் விற்பனை செய்யபடும் மாடல்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் மாருதி சுசூகி , டொயோட்டா, டாடா,ஹோண்டா உட்பட அனைத்து முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளது.