நிசான் சன்னி செடான் கார் விலை ரூ. 1.96 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சன்னி செடான் காரின் ஆரம்ப விலை ரூபாய் 6.99 லட்சம் விலையில் வெளிவந்துள்ளது.

நிசான் சன்னி கார்

  • ரூ. 6.99 லட்சம் விலையில் சன்னி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
  • உள்நாட்டிலே பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் விலை சரிந்துள்ளது.
  • காம்பேக்ட் ரக செடான்களுக்கு சவாலாக நடுத்தர ரக செடான் மாடல் அமைந்துள்ளது.

காம்பேக்ட் ரக செடான் கார்களான எக்ஸ்சென்ட் , டிசையர், ஆஸ்பயர், ஸெஸ்ட் மற்றும் அமேஸ் போன்ற கார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான மாடலாக நடுத்தர பரிவில் அமைந்துள்ள செடான் கார் விலை அமைந்துள்ளது.

நிசான் சன்னி கார்

99 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 82 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 101 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் எக்ஸ்ட்ரானிக் சிவிடி (XTRONIC CVT) இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள மாடல்களின் வசதிகளில் இருந்து எந்த மாற்றங்களும் இல்லாமல், உள்நாட்டிலே பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுவதனால் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்  XL CVT வேரியன்ட் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

வேரியன்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
XE Petrol ரூ. 7,97,300 ரூ. 6,99,000 ரூ. 98,300
XL Petrol ரூ. 8,64,133 ரூ. 7,59,000 ரூ. 87,133
XL CVT Petrol ரூ. 9,61,364 நீக்கம்
XV CVT Petrol ரூ. 10,95,263 ரூ. 8,99,000 ரூ. 1,96,263
XE Diesel ரூ. 8,86,066 ரூ. 7,49,000 ரூ. 1,37,066
XL Diesel ரூ. 9,52,035 ரூ. 7,99,000 ரூ. 1,53,035
XV Diesel ரூ. 9,99,000 ரூ. 8,99,000 ரூ. 1,00,000
XV Safety Diesel ரூ. 10,82,011 ரூ. 10,76,011 ரூ. 6,000