Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விரைவில்., புதிய ரெனோ க்விட் கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது

by MR.Durai
26 August 2019, 11:49 am
in Car News
0
ShareTweetSend

2019 renault kwid

வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் புதிய மேம்படுத்தப்பட்ட ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎஸ் 4 என்ஜினுடன் பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாகவும் போட்டியாளர்களான ஆல்ட்டோ, வரவிருக்கும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா கேயூவி 100 போன்ற கார்களை எதிர்கொள்ள உள்ளது.

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அறிமுகத்தில் அதிகம் வரவேற்பினை பெற்ற கார் மற்றும் முதன்மையான மாருதி சுசூகியின் ஆல்ட்டோ காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தி மாடலாக விளங்கி வரும் க்விட் காரில் தொடர்ந்து 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

ஏப்ரல் 2020க்கு முன்பாக பிஎஸ் 6 என்ஜின் அறிமுகம் செய்யப்படலாம்.

2019 renault kwid

சீனாவில் நடைபெற்ற 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வெர்ஷன் Kwid KZE அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட உள்ள இந்த மாடல் மிக ஸ்டைலிஷான பல்வேறு அம்சங்களை கொண்டதாக வரவுள்ளது. மேலும் இன்டிரியர் அமைப்பினை பொருத்தவரை வரவுள்ள எம்பவி ரக ரெனோ ட்ரைபரின் பெரும்பாலான பாகங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

8 அங்குல தொடு திரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

புதிய ரெனோ க்விட் காரின் ஆரம்ப விலை ரூ. 2.90 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்தியாவில் எலக்ட்ரிக் க்விட்  கார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

9ab03 renault city k ze

Related Motor News

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி.., ரெனால்ட் கார்கள் விலை ரூ.96,395 வரை குறைப்பு

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது

ரெனால்ட் கார்களுக்கு ரூ.78,000 வரை மார்ச் 2025 தள்ளுபடி..!

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான ரெனால்ட் க்விட், கிகர் மற்றும் ட்ரைபர்

ரெனால்ட் க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் என மூன்றிலும் நைட் & டே எடிசன் வெளியானது

Tags: Renault Kwid
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

volkswagen ID.Cross Electric suv

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

skoda epiq electric suv

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan