விலை ரூ. 35.99 லட்சம், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 அறிமுகப்படுத்தப்பட்டது

0

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245

இந்தியாவில் 200 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 பெர்ஃபாமென்ஸ் கார் ரூ.35.99 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 2018 ஆம் ஆண்டு ஆக்டேவியா ஆர்எஸ் கார் 500 எண்ணிக்கையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

Google News

ஆர்எஸ் காரில் உள்ள 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜினின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பைக் கொண்டுள்ளது. இப்போது 245 ஹெச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் (முந்தைய பதிப்பை விட 15 ஹெச்பி மற்றும் 20 என்எம் அதிகம்) வெளியிடுகிறது. 7 வேக டி.எஸ்.ஜி ஆட்டோ கியர்பாக்ஸை கொண்டுள்ளது., ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.6 விநாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. அதே நேரத்தில் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக உள்ளது.

தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான முன்புற கிரில், 19 அங்குல அலாய் வீல் கருப்பு நிறத்துடன், புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ளது. மற்றபடி இன்டிரியரில் மிக நேர்த்தியான பல்வேறு புதிய வசதிகளை பெற்றுள்ளது.

ஆக்டேவியா ஆர்எஸ் 245 முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக (CBU) இறக்குமதி செய்யப்பட உள்ளது. மார்ச் 1 ம் தேதி மதியம் 12 மணிக்கு முன்பதிவு திறக்கப்படும், ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.