ஜனவரி 22.., டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு அறிமுகமாகிறது

0

Tata Altroz Launch Date

2020 ஆம் ஆண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வெற்றிகரமாக துவக்கமாக அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலை ஜனவரி 22, 2020-ல் விற்பனைக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கார் இம்பேக்ட் 2.0 டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மிக சிறப்பான அல்ஃபா பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக விளங்குகின்றது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ரோஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது. அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளது. நாளை முதல் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஜனவரி 22, 2020-ல் விலை அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க – டாடா அல்ட்ராஸ் மைலேஜ், விலை, சிறப்புகள்