டாடா அல்ட்ராஸ் காரில் XM+ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

0

tata altroz car red color 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்படுள்ள XM+ வேரியண்டின் விலை ரூ.6.60 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

பெட்ரோல் இன்ஜின் பெற்ற மாடலில் மட்டும் கிடைக்கின்ற புதிய வேரியன்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், வாய்ஸ் அலெர்ட்ஸ், வாய்ஸ் கமென்ட், 16 அங்குல ஸ்டீல் வீல் உடன் வீல் கவர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை உடன் டிரைவிங் மோட் (சிட்டி மற்றும் ஈக்கோ) வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

web title : Tata Altroz XM+ launched at Rs 6.60 lakh