40 லட்சம் கார்களை உற்பத்தி செய்த டாடா மோட்டார்ஸ்

0

Tata Motors 40 lakhs car

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பயணிகள் வாகன உற்பத்தியில் களமிறங்கிய 29 ஆண்டுகளுக்கு பிறகு 4,000,000 எண்ணிக்கையை கடந்துள்ளது. முதல் காராக டாடா சியரா விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கார்களாக சியரா, சுமோ, சஃபாரி, இண்டிகா மற்றும் நானோ போன்றவை பிரபலமாக விளங்கிய நிலையில், தற்போது விற்பனையில் உள்ள புதிய டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி, மற்றும் ஹாரியர் போன்றவை சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

முதல் 10 லட்சம் கார் உற்பத்தியை 2005-2006 ஆம் எட்டிய இந்நிறுவனம், 30 லட்சம் வாகன உற்பத்தியை 2015 ஆம் ஆண்டு கடந்தது. அதன் பிறகு இப்போது 40 லட்சத்தை கடந்துள்ளது. புனே ஆலையில் 40 லட்சமாவது காராக டாடா ஹாரியர் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 67 சதவீத எலக்ட்ரிக் பயணிகள் வாகன சந்தையை கைப்பற்றி நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக விளங்குகின்றது.

Web Title : Tata Motors achives four million cars production