டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி முன்பதிவு ஆரம்பம்

0

Tiago CNG booking

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டிலும் CNG மாறுபாட்டை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடுவதனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

Google News

தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பில் அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கலாம்.

மாருதி மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்கள் மட்டும் சிஎன்ஜி சந்தையை பெரிதும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நுழைவு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதந்திர கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னனுக்கு தள்ளி டாடா மோட்டார்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது.