கூடுதல் பாதுகாப்புடன் டாடா டியாகோ கார் வெளியானது

டியாகோ

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின், பிரபலமான டியாகோ காரில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் விற்பனையாகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான டியாகோ காரின் விலை தற்போது ரூ.4.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா டியாகோ காரின் வசதிகள்

முந்தைய மாடலை விட பேஸ் வேரியன்ட் விலை ரூ.13,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பெற்றுள்ள அம்சங்கள் இரு முன்பக்க ஏர்பேக், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS),எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபுசன் (EBD), கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (CSC), மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவற்றுடன் அதி வேக எச்சரிக்கை , ஒட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை எச்சரிக்கை போன்றவற்றை கொண்டுள்ளது.

 

தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா ஆல்ட்ரோஸ் காரினை போல இம்பேக்ட் டிசைன் 2.0 அம்சத்தை பெற்றதாக மேம்படுத்தப்பட்ட டியாகோ கார் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பிஎஸ் 6 என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படும் சிறிய ரக டீசல் காரை கைவிடும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, டியாகோ காரில் டீசல் என்ஜின் கார் மாடல் விற்பனைக்கு வெளியாகாது.