டாடா டிகோர் காரில் கூடுதல் ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்

0

tata tigor

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், காம்பாக்ட் ரக செடான் டாடா டிகோர் மாடலில் கூடுதலாக இரண்டு வேரியண்டுகளில் ஏஎம்டி இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஏஎம்டி பெற்ற மாடல்களில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

Google News

XMA மற்றும் XZA+ வேரியண்டுகளில் மட்டும் புதிதாக கிடைக்க உள்ளது.  15 அங்குல டைமனுட் கட் அலாய் வீல், புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் போன்றவை கொண்டதாக வந்துள்ளது.

முன்பக்க இரு காற்றுப்பைகள்,ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், ஹார்மன் மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் உடன் கூடிய இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.  XZA+ வேரியன்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் 7.0 கனெக்ட் நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆப்பிள் கார் ப்ளே ஆதரவு போன்றவை இடம்பெற்றுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8 பிஹெச்பி பவர் மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Tata Tigor XMA – ரூ. 6.39 லட்சம்

Tata Tigor XZA+ – ரூ. 7.24 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)