டாடா டிகோர் ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகமானது

0

tata tigor rearடாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற டியாகோ அடிப்படையிலான டிகோர் செடான் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கூடிய XTA வேரியன்ட் ரூ.5.75 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

டாடா டிகோர் ஏஎம்டி

tata tigor xm

கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக டிகோர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான தேர்வுகளிலும் கிடைத்து வருகின்றது.

ரெவோட்ரான் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்ற XTA மற்றும் XZA ஆகிய இரு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஎம்டி மாடல் மேனுவல் மாடலை விட ரூ.40,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

இரு வேரியன்ட்களிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள்,ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் உடன் கூடிய இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.  XZA வேரியன்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் கனெக்ட் நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

tata tigor seats

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டிகோர் ஏஎம்டி விலை பட்டியல்

Tigor XTA – ரூ.5.75 லட்சம்

Tigor XZA – ரூ.6.22 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

tata tigor side view tata tigor side