கொழுந்து விட்டு எரிந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் விபரம் வெளியானது

0

tesla model 3

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்று டிரக்கில் மோதி அடுத்த சில நிமிடங்களுக்குள் வெடித்து கொழுந்து விட்டு எரிகின்ற காட்சி ருசியா 24 டிவி உட்பட பல்வேறு சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Google News

டெஸ்லாவின் மின்சார கார் தீப்பற்றி அடுத்த சில நிமிடங்களில் கார் சிறிய அளவில் இரண்டு முறை வெடித்து முழுமையாக எரிந்து விட்ட நிலையில் வெறும் மெட்டல் ஃபிரேம் மட்டும் மிஞ்சியுள்ளது. கடந்த சனிக்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோ ரிங் ரோடு  MKAD என அழைக்கப்படுகின்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்த டெஸ்லா நிறுவன கார் முன்புறம் சென்று கொண்டிருந்த டோ டிரக் மீது மோதிய அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியதாக காரின் உரிமையாளர் அலெக்ஸி ட்ரெட்டியாகோவ் (41) தெரிவித்துள்ளார்.

கார் முழுமையாக தீப்பற்றுவதற்குள் காரிலிருந்து அலெக்ஸி உட்பட அவருடைய இரண்டு குழந்தைகளும் வெளியேறிவிட்டதால் பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. எனினும், சிறிய அளவிலான காயங்களுடன் தப்பித்துள்ளனர். கார் விபத்தில் சிக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஆட்டோமோட்டிவ் பாதுகாப்பு முகமையான watchdog வெளியிட்டுள்ள அறிகையில் கடந்த ஆண்டு முதல் இதுவரை டெஸ்லா மாடல் 3 கார் பாதுகாப்பு தொடர்பாக 5 சம்மன்களை வழங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கனடா நாட்டில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி ஒன்று வெடித்திருந்தது.