விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

டெஸ்லாவின் மாடல் 3 கார், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் விபத்து சோதனையில் முழு அளவிலான வெற்றியை பெற்றுள்ளது.

வேறொரு வாகனத்துடன் மோதும் போது காரின் முன்பக்கமாகவும், பின் பக்கமாகவும் ஏற்படும் விளைவுகள், உருளும் போது உண்டாகும் சேதங்கள் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு அமெரிக்க விபத்து சோதனையில் ஒவ்வொரு காருக்கும் அவற்றின் செயல்திறனுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் டெஸ்லாவின் மாடல் 3 கார், சோதனையில் முழு அளவில் வெற்றி பெற்று ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளது. மணிக்கு 56 மற்றும் 62 கிலோ மீட்டர் வேகத்தில் கார் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.