டொயோட்டா யாரீஸ் கார் அறிமுக தேதி & முன்பதிவு விபரம்

0

yarisஇந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் கார் மாடல்களுக்கு மிக சவாலாக அமையவுள்ள டொயோட்டா யாரீஸ் செடான் காரின் எஞ்சின் , சிறப்பு வசதிகள் மற்றும் நுட்ப விரங்களை முழுமையாக தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளலாம்.

டொயோட்டா யாரிஸ் கார்

toyota yaris car

இந்தியாவில் மிகவும் தரமான மற்றும் நம்பகமான கார் தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்று விளங்கும் டொயோட்டா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நடுத்தர ரக பிரிவு செடான் கார் மாடலான யாரிஸ் கார் பல்வேறு வெளிநாடுகளில் யாரிஸ் அல்லது வயோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டிசைன்

உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக விளங்கும் கரோல்லா காரின் தோற்ற அமைப்பினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக நேர்த்தியா பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், புராஜெக்ட் ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.

4,425 மிமீ நீளம் கொண்டுள்ள யாரிஸ் காரில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2,550 மிமீ வீல்பேஸ் பெற்று பக்கவாட்டில் அலாய் வீல், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.

toyotas yaris headlight

இன்டிரியர்

மிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக வரவுள்ள யாரிஸ் காரின் டேஸ்போர்டில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கும். இந்த அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுத் இடம்பெற்றிருக்கலாம்.

toyota yaris rear seat

தொடுதிரை நேவிகேஷன், ரியர் வியூ கேமரா, மேற்கூறையில் வழங்கப்பட்டுள்ள ஏர்கான் வென்ட், பின்புற மூன்று இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் அமைப்பு, எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார் போன்றவற்றை கொண்டிருக்கும்.

எஞ்சின்

முதற்கட்டமாக யாரிஸ் செடான் காரில் 108hp பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது. டீசல் எஞ்சின் பெற்ற மாடல் மற்றும் ஹைபிரிட் ரக பெட்ரோல்-எலெக்ட்ரிக் மாடல்கள் தாமதமாக விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

toyota yaris engine

சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு சார்ந்த ASEAN NCAP கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று விளங்கும் யாரிஸ் காரில் இந்த செக்மென்ட் பிரிவில் உள்ள மாடல்களை இடம்பெறாத நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக்குகள் , டயர் பிரெஷர் மானிட்டெரிங், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றிருக்க உள்ளது.

toyota yaris rear view camera

போட்டியாளர்கள்

இந்தியாவில் முன்னணி காம்பேக்ட் ரக செடான் மாடலாக விளங்கும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களை நேரடியாக யாரிஸ் கார் எதிர்கொள்ள உள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள போட்டியாளர்களை விட மிக சிறப்பான இடவசதி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.

 

விலை & வருகை விபரம்

எட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் ஆகிய இரு மாடல்களுக்கு இடையே மிகவும் சவாலான விலையில் டொயோட்டா யாரீஸ் கார் 2018 மே மாதம் 18ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகார்ப்பூர்வ முன்பதிவு ஏப்ரல் 22ந் தேதி தொடங்கப்பட உள்ளது.

toyotas yaris rear

விற்பனையில் உள்ள போட்டியாளர்களை ஈடுகொடுக்கும் வகையில் உள்நாட்டில், பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால், டொயோட்டா யாரிஸ் கார் விலை ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.13.50 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

Toyota Yaris Image Gallery