ஃபோக்ஸ்வாகன் Taigun, ஸ்கோடா Vision IN எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள என்ஜின் விபரம்

2020 volkswagen taigun suv unveiled

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா நிறுவன Vision IN மற்றும் Taigun எஸ்யூவி கார்களில் இடம்பெற உள்ள இரண்டு பெட்ரோல் என்ஜின்களான 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

சர்வதேச அளவில் பல்வேறு கார்களில் இரு நிறுவனங்களும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ என்ஜினை பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஃபோக்ஸ்வாகன் குழுமம் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகனில் இனி டீசல் என்ஜின் பெற்ற பிஎஸ்6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரப்போவதில்லை. டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷனை அடுத்த ஆண்டின் மத்தியில் வழங்க உள்ளது.

1.0 லிட்டர் TSI என்ஜின்

மூன்று சிலிண்டர், 1.0-லிட்டர் டி.எஸ்.ஐ டைரக்ட் இன்ஜெக்‌ஷன் முறையைப் பெற்று இரண்டு விதமான பவர் ஆப்ஷனில் கிடைக்கின்றது. ஆரம்பநிலையில் 95PS பவர் மற்றும் 175Nm டார்க், அடுத்து 115PS பவர், 200Nm டார்க் வழங்குகின்றது. இரண்டுமே 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி ஆட்டோமேட்டிக் உடன் வழங்கப்படுகின்றது. அடுத்த மேனுவலை பொறுத்தவரை 95 பிஎஸ் பவர் கொண்ட என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸூடனும், 115 பிஎஸ் பவரை வழங்கும் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெறுகிறது.

1.5 லிட்டர் TSI என்ஜின்

1.5 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோலும் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் முறையைப் பெற்று கூடுதலாக சிலிண்டர் நிர்வாக அம்சத்தையும் பெறுகிறது. செயல்திறனை அதிகரிக்க தேவையில்லாதபோது இந்த என்ஜின் நான்கு சிலிண்டர்களில் இரண்டினை அணைத்து விட்டு மற்ற இரண்டில் இயக்க முடியும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்ம் டார்க் வெளிப்படுத்தம். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி தானியங்கி கியர்பாக்ஸூடன் வழங்கப்படுகிறது.

மேலும் படிங்க – ஃபோக்ஸ்வாகன் டைகன் எஸ்யூவி சிறப்புகள்

ஸ்கோடா விஷன் ஐஎன் சிறப்புகள் 

skoda vision in concept