புதிய வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி அறிமுகம் – Auto expo 2020

0

2020 volkswagen taigun suv unveiled

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரத்தியேகமான இந்திய தயாரிப்பு எஸ்யூவி காரினை டைகன் (Volkswagen Taigun) என்ற பெயரில் காட்சிப்பட்டுத்தியுள்ளது. டைகன் எஸ்யூவி இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Google News

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற டி கிராஸ் காரின் அடிப்படையில் டைகன் எஸ்யூவி கான்செப்ட் மாடலை வோக்ஸ்வேகன் வெளியிட உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டி-கிராஸ் காரை விட 100 மிமீ வரை கூடுதலான நீளத்தைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான பல்வேறு பிரத்தியேகமான அம்சங்களை கொண்டு 90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுத்தின் MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள மிக ஸ்டைலிஷான கிரில் அமைப்புடன் க்ரோம் பூச்சூ, நேரத்தியான வடிவமைப்பினை பெற்ற எல்இடி ஹெட்லைட், 17 அங்குல அலாய் வீல் என கம்பீரமாக காட்சியளிக்கின்ற இந்த கான்செப்ட் நேரடியாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி பார் மற்றும் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை மிக நேரத்தியான முறையில் ஃபினிஷ் செய்யப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டர், பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் வகையிலான 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற உள்ளது. மேலும் இருக்கைகளுக்கு இடையிலான தாராளமான இடவசதி, சிறப்பான பூட் ஸ்பேஸ் பெற்றிருக்கும் என கருதப்படுகின்றது.

volkswagen-taigun-suv-unveiled

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை இந்திய சந்தைக்கு ஏற்ப சிறப்பான வகையில் தனது மாடல்களில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி என பல்வேறு அம்சங்களை வழங்க உள்ளது.

உற்பத்திநிலை டைகன் எஸ்யூவி காரில் 130 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு இயக்கப்படும். இந்த காரில் 6 வேக மேனுவல் உட்பட 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் டீசல் என்ஜின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கூடுதலாக சிஎன்ஜி இணைக்கப்படலாம்.

இந்திய சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உட்பட ஹெக்டர், எக்ஸ்யூவி500  போன்ற மாடல்ளை எதிர்கொள்ள 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் குழுமம் செயற்படுத்த உள்ள இந்தியா 2.0 திட்டம் மிகப்பெரிய அளவில் இந்நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை விரிவுப்படுத்த உதவும் என கருதப்படுகின்றது.

வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி
வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி மேற்புறம்
வோக்ஸ்வேகன் டைகன்
வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி பின்புறம்
வோக்ஸ்வேகன் டைகன் கார் அறிமுகம்
வோக்ஸ்வேகன் டைகன்