ஸா பாலோ சர்வதேச மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது வோக்ஸ்வாகன் டாரோக் கான்செப்ட்

வோக்ஸ்வாகன் நிறுவனம் தனது புதிய டாரோக் கான்செப்ட் வெளியிட்டுள்ளது. டாரோக் பிக்-அப் வாகனங்கள் அமராக் வாகனங்களை விட சிறிதாக இருக்கும். இந்த வாகனங்கள் வோக்ஸ்வாகன் MQB பயணிகள் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

டாரோக் வாகனங்களில் தட்டையான லோடிங் பகுதி மற்றும் இரண்டாவது வரிசையில் சீட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மடக்கும் வசதி கொண்ட பின்புற பேனல் உள்ளது. மேலும் இந்த வாகனங்கள் அதிகபட்சமாக 1000kg எடை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த வாகனத்தின் முன்புறம் அட்லாஸ் டாரோக் கான்செப்டை ஞாபகபடுத்தும் வகையில் இருக்கும். மேலும் இந்த வாகனத்தின் மேற்புறத்தில் ரூப்-ரெயில் மற்றும் பின்புறத்தில் 3D LED ஸ்ட்ரிப்கள் பொருத்தப்பட்டுள்ளது. விர்சுவல் காப்பிட் மற்றும் டச்ஸ்கீரின் சென்டர் டாஷ்போர்டு, வெளிபுறத்தில் கலர் கிராஸ் பார்களையும் கொண்டிருக்கும்.

இந்த வாகனங்கள் 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்ச்டு இன்ஜின் கொண்டிருக்கும். இந்த இன்ஜின் 148bhp ஆற்றலுடன், சுத்தமான எதனால் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும். மேலும் இந்த இன்ஜின் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் 4மோஷன் AWD ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி இந்த வாகனம், 2.0 லிட்டர் TDI டீசல் யூனிட்டாகவும் கிடைக்கிறது.

இந்த வாகனங்கள் பிரேசில் மார்க்கெட் மட்டுமின்றி சர்வதேச மார்கெட்டிலும் கிடைக்கிறது. இந்த வாகனங்கள் எப்போது ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை வோக்ஸ்வாகன் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.