ரூ.39.90 லட்சம் வால்வோ XC40 T4 ஆர்-டிசைன் விற்பனைக்கு அறிமுகமானது

0

Volvo XC40 T4 R-Design

வால்வோ  இந்தியாவில் முதன்முறையாக எக்ஸ்சி40 காரில் பெட்ரோல் என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு XC40 T4 ஆர்-டிசைன் ரூ.39.90 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் இந்தியா) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

எக்ஸ்சி 40 எஸ்யூவி காரில் இப்போது பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான, 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது. 190 ஹெச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் டீசல் மாடலை போல, எக்ஸ்சி 40 பெட்ரோல் பதிப்பு ஆல் வீல் டிரைவ் முறைக்கு மாற்றாக முன் சக்கர டிரைவ் கொண்டுள்ளது.

எக்ஸ்சி 40 பெட்ரோல் ஆர்-டிசைன் வேரியண்டில் மட்டுமே கிடைப்பதால், பனோரமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆதரவுடன் 9.0 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஒலி அமைப்பு, இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, முன் மற்றும் பின்புற பார்க்கிங் அசிஸ்ட், டைமன்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் பவர்டு டெயில்கேட் பெற்றுள்ளது.

மேலும் படிங்க – வோல்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் அறிமுகம்

Volvo XC40 T4 R-Design