Categories: Auto News

சென்னையில் ஃபார்முலா 4 பந்தய அனுமதி FIA வழங்கியது

Chennai formula 4 race

சென்னையில் நடைபெறுகின்ற முதல் பார்முலா 4 கார் பந்தயத்திற்கான தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, FIA அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இரவு 7:00 மணி முதல் பயிற்சி ஆட்டம் துவங்கும் என புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

19:00 – 19:25: JK FLGB F4 – பயிற்சி சுற்று – 1

19:40- 20:05: F4 India – பயிற்சி சுற்று – 1

20.20 – 20:45: IRL – டிரைவர் ஏ – பயற்சி சுற்று

21:00 – 21:25: JK FLGB F4 – பயற்சி சுற்று – 2

21:40- 22:05:F4 India – பயற்சி சுற்று – 2

22:20 – 22:45: IRL – டிரைவர் நீ – பயற்சி சுற்று

17:50 – 18:30: பொழுது போக்கு-கார் சாகச காட்சிகள்

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தய போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ள சென்னையின் ஃபார்முலா நான்கு பந்தயங்கள் பல்வேறு தடங்கலுக்கு பிறகு தற்பொழுது FIA அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. ரேஸ் டிராக்கினை மிக நேர்த்தியாக தமிழ்நாடு அரசு கட்டமைத்துள்ளது.