ஜாவா மோட்டார் சைக்கிள்கே தங்கள் புதிய இன்ஜின் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியன் மோட்டார் சைக்கிள் மார்கெட்டில், மோட்டார் சைக்கிள் துறையில் பெரியளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் விற்பனையை சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கிளாசிக் லெஜண்ட்கள் முதல்முறையாக 293cc இன்ஜின்களுடன் கூடிய புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய இன்ஜின் 293cc, லிகியுட் கூல்டு, சிங்கள் சிலிண்டர் DOHC இன்ஜின்கள் 27 bhp உச்சபட்ச ஆற்றலில் 28 Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும்.
இந்த இன்ஜினை உருவாக்க ஜாவா இன்ஜினியர்கள் அதிக உழைப்பை செலவிட்டுள்ளனர். இதன் உழைப்பின் மூலம் ஜாவா மோட்டார் சைக்கிள்களில் இடம் பெரும் தனித்துவமிக்க சத்தத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
புதிய 300cc இன்ஜின்களை பொருத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள், ராயல் என்பில்ட் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.