இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட முதல் ஓகே பிளே இ ராஜா எலக்ட்ரிக் ரிக்ஷா ரூ.1.15 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இ ராஜா எலக்ட்ரிக் ரிக்ஷா சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனமாகும்.
ஓகே பிளே இந்திய நிறுவனம் குழந்தைகளுக்கான பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும் . ஓகே பிளே இந்திய நிறுவனம் 2003 முதல் ஆட்டோமொபைல் சந்தையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இ ராஜா
விற்பனையில் உள்ள பெரும்பாலான எலக்ட்ரிக் ரிக்ஷாகளின் பாகங்கள் உற்பத்தி சீனாவிலே 95 % உள்ள நிலையில் 90 5 பாகங்கள் வரை இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்ற முதல் எலக்ட்ரிக் ரிக்ஷாவாக இ – ராஜா வந்துள்ளது.
400 கிலோ எடை இழுவை திறனை கொண்டுள்ள இ ராஜா ரிக்ஷாவில் 4 +1 பயணிகள் பயணிக்க இயலும். பேட்டரி திறன் , சார்ஜிங் நேரம் , போன்றவை வெளியிடப்படவில்லை.
மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கு வகிக்கும் நோக்கிலே இந்த எலக்ட்ரிக் ரிக்ஷா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிற்க்கு 3,00,000 ரிக்ஷாக்களை தயாரிக்கும் திறன் கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் ராணிப்பேட்டை மற்றும் ஹரியானாவில் சோனா பகுதியில் ஆலைகள் உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 10 மில்லியன் சைக்கிள் ரிக்ஷா மற்றும் 7.5 மில்லியன் ஆட்டோக்களும் உள்ளன . இதனால் மிகப்பெரிய வரவேற்பினை பெறும் என ஓகே பிளே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுதும் சிறப்பான சேவையை வழங்கும் வகையில் டீலர் நெட்வொர்கினை உருவாக்க உள்ளது.